4 குழந்தைகள் உட்பட 6 பேர் தூக்கிட்டு தற்கொலை.!

Default Image

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் மற்றும் அவர்களது 4 குழந்தைகள் ஆளில்லாத காலியான பிளாட்டில் தொங்கிய நிலையில் காவல் துறை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தில் 7 முதல் 12 வயதுக்குட்பட்ட 4 குழந்தைகள் மற்றும் இரண்டு பேர் ஆளில்லாத காலியான பிளாட் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள வாட்வாவிலுள்ள ஜி. ஐ. டி. சி வட்டாரத்தில் உள்ள அவர்களது சொந்த பிளாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான அம்ரிஷ் பட்டேல்(42) மற்றும் கௌரங் பட்டேல்(40) ஆகியோரும், அவர்களது நான்கு குழந்தைகளான கீர்த்தி (9),சான்வி(7),மயூர்(12) மற்றும் துருவ்(12) ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக காவல்துறை ஆய்வாளர் டி. ஆர். கோஹில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது,வெவ்வேறு இடங்களில் தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்த இரு சகோதரர்களும் ஜூன் 17ம் தேதி தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர். குழந்தைகளுடன் அவுட்டிங் போவதாக தங்களது மனைவிகளுடன் கூறிய அவர்கள், அதனையடுத்து தனது குடும்பத்திற்கு சொந்தமான காலியாக உள்ள பிளாட்டில் குழந்தைகளுடன் சென்றுள்ளனர். இரவு ஆன பின்னரும் திரும்பி வராத நிலையில், இருவரின் மனைவியும் அவர்களது பிளாட்டிக்கு செல்ல அது உள்ளிருந்து பூட்டியிருப்பதை கண்டு அருகிலுள்ள காவல்  நிலையத்திற்கு சென்று கூறியுள்ளனர். அதனையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் ,தூக்கில்  தொங்கிய நிலையில் 6 பேரின் சடலங்களையும் கண்டெடுத்தனர்.

இரண்டு சகோதரர்களின் உடல்களை  ஓவிய அறையிலிருந்தும், இரு சிறுமிகளான கீர்த்தி மற்றும் சான்வியை சமையலறையிலும், மயூர் மற்றும் துருவ் ஆகிய சிறுவர்களை படுக்கையறையிலிருந்தும் தொங்கிய நிலையில் கண்டதாக தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு உணவில் தூக்க மருந்து கலந்து கொடுத்த பின்னர் தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்றும்  இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு, ஏன், எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்பதனை குறித்த விசாரணை நடந்தி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்