‘தமிழரசன்’ படத்தில் விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா.!

Default Image

விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள தமிழரசன் படத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் வீரராக நடிக்கவுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

விஜய் ஆண்டனி, இவர் இசையமைப்பாளராக சினிமாயுலகில் அறிமுகமானார். அதனையடுத்து பல படங்களில் நடித்து பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர். இவர் ஒரு பின்னணி பாடகரும் கூட. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்து, இவரின் மார்கெட்டை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இதில் இவர் நடிக்கும் ஒரு படமான தமிழரசன் படத்தின் ஸ்டில் ஒன்றை விஜய் ஆண்டனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். யோகேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் கலந்த படமாகும். ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடிக்கும் இந்தப் படத்தில் சுரேஷ் கோபி, சாயா சிங், சங்கீதா, கஸ்தூரி, சோனு சூட் மற்றும் இயக்குநர் மோகன் ராஜாவின் மகனான பிரனவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர் வெளியிட்ட புகைப்படத்திலிருந்து விஜய் ஆண்டனி தமிழ்நாடு கிரிக்கெட் வீரராகவும், சோனு சூட் டெல்லி கிரிக்கெட் வீரராகவும் இந்த படத்தில் நடிப்பதாக தெரிகிறது.

 

View this post on Instagram

A still from my movie Tamilarasan. What’s your favorite sport friends?

A post shared by Vijay Antony (@vijayantony) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்