தமிழக முதல்வரால் சந்திரபாபு நாயுடு செய்ததை போல செய்ய முடியுமா?

Default Image

முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா 15 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் சந்திரபாபு நாயுடு செய்ததை போல முதல்வரால் செய்ய முடியுமா என  கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூர் மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ரஜினி கூறுவது ஏற்புடையதல்ல என்றும், 18 வயது தொடங்கி 65 வயது வரை அயராமல் மக்களுக்காக உழைத்த மு.க.ஸ்டாலினை சிறுமைப்படுத்த ஒரு கூட்டம் ரஜினியை இதுபோல் இயக்குவதாக ஆ.ராசா விமர்சித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் அதிமுகவோ அல்லது ஜெயலலிதாவோ எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்றும், மாறாக காவிரி நடுவண் மன்றம் அமைத்தபோது ‘இது பல் இல்லாத ஆணையம்’ என்று கிண்டல் செய்தவர் ஜெயலலிதா என்றும் ஆ.ராசா தெரிவித்தார்.

காவிரி நடுவண் ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததிலிருந்து, இடைக்கால நிவாரணமாக 250 டி.எம்.சி தண்ணீர் பெற்றுத்தந்ததுவரை அனைத்தும் திமுகவினால் மட்டுமே நடந்தது என்றும் அவர் கூறினார். அனைத்து முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் திமுக எடுத்த நிலையில் அரசிதழில் அதை வெளியிட்டது மட்டுமே ஜெயலலிதா செய்த நடவடிக்கை என்றும் ஆ.ராசா கூறினார்.

15 நாட்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் சந்திரபாபு நாயுடு செய்ததை போல முதல்வரால் செய்ய முடியுமா? என முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

பல தியாகங்கள் செய்த ஊழலற்ற தமிழக தலைவர்களின் படம் இடம்பெற்றிருக்கும் இடத்தில் ஜெயலலிதாவின் படத்தை வைப்பது முறையில்லை என்று கூறிய ஆ.ராசா, ரூ.20 கோடி செலவில் கட்டப்படும் ஜெயலலிதா சமாதியில் “சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலலிதாவின் சமாதி” என்ற வாசகத்தை பொறிப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்