துருவ நட்சத்திரம் படத்தில் முதலில் நடித்த சூர்யா.! யாரும் பார்த்திராத புகைப்படம்.!
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தில் முதலில் நடித்த சூர்யாவின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படம் படம் பல மாதங்களாக கிடப்பில் உள்ளது. இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், அர்ஜுன் தாஸ், பார்த்திபன், நடன இயக்குனர் சதீஷ், ராதிகா, வம்சி, மாயா, DD ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முதன்முதலாக பார்த்திபன் இந்த படத்தின் மூலம் வில்லனாக நடிக்கவுள்ளார். மேலும் கௌதம் மேனன் மற்றும் ஐசரி கணேஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் கூட கௌதம் மேனன் இந்த படத்தினை வெளியிடுவதற்கான அனைத்து பணிகளும் நடைப்பெற்று வருவதாகவும், இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது துருவ நட்சத்திரம் படத்திலுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. முதலில் துருவ நட்சத்திரம் படத்தில் சியான் விக்ரம் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கவிருந்தார். அதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது. தற்போது அவ்வாறு சூர்யா நடிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது அதில் சூர்யா, டேனியல் பாலாஜி, மலிந்த் சோமன், வீரா போன்ற நடிகர்கள் உள்ளனர்.இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு காதல் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக அவரே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சூர்யாவின் துருவ நட்சத்திரம் படத்திலுள்ள அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.