கொடூர கொரோனா திண்டாடி ஓடும் – அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்.!

Default Image

கைகளை சுத்தமாகவும், முககவசம் அணிந்தும், சமூக விலகலை கடைபிடித்து ஒத்துழைப்பு தந்தால் கொரோனாவை விரட்டலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று சென்னை உள்ளிட்ட சில இடங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி இரவு 12 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல மாநிலங்களில் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது.மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், சுகாதார துறை அமைச்சரான விஜயபாஸ்கர், கொரனா குறித்த அடுத்தடுத்த தகவல்களை அவரது டுவிட்டர் பக்கம் மூலம் அனைவருக்கும் தெரிவித்து வருகிறார். மேலும், கொரோனா தடுக்க தொடங்கப்பட்ட முகாமிற்கு அவரே சென்று பார்வையிட்டும், மருத்துவமனைகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கண்காணித்தும் வருகிறார். இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும், கொரோனாவிலிருந்து பாதுகாக்கவும் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், நமது அரசு முன்னின்று மக்களை காக்கும். நாங்கள் இருக்கிறோம். போர் களத்தில் மருத்துவ பணியாளர்களாக, காவல்துறை வீரர்களாக உங்களுக்காக போராடுகிறோம். ஒத்துழைப்பு மட்டும் தந்து நம்பிக்கையோடு காத்திருங்கள், கொரோனாவை வீழ்த்துவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் அஞ்சாத அயல்நாடுகளில், திண்டாடி நடுங்கும் கொடூர கொரோனா திண்டாடி ஓடும். விலகியிருந்து விழிப்புடன் இருந்து வென்றிடுவோம் பெருந்தொற்று அரக்கனை. அஞ்சாதீர்கள், நெஞ்சுரம் கொள்ளுங்கள். முககவசம் தரித்து கைகளை சுத்தப்படுத்தி அநாவசியம் தவிர்த்து வீட்டிலிருங்கள், அடங்கும் தொற்று என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்