ஜப்பானில் வானத்தில் தோன்றிய அடையாளம் தெரியாத பலூன் போன்ற பொருள்!
ஜப்பானில் வானத்தில் தோன்றிய அடையாளம் தெரியாத பலூன் போன்ற பொருள்.
வடக்கு ஜப்பானின், செண்டாய் நகரில் புதன்கிழமை அன்று, வானத்தில் அடையாளம் தெரியாத பலூன் போன்ற ஒரு பொருள் தோன்றியுள்ளது. இதனையடுத்து, சென்டாயில் எடுக்கப்பட்ட தொலைக்காட்சி காட்சிகள், சிலுவைக்கு மேல் அந்த பலூன் போன்ற பொருள் தெரிந்துள்ளது.
இந்த பலூன் போன்ற பொருள் குறித்து, செண்டாயில் உள்ள வானிலை பணியக அதிகாரிகள் கூறுகையில், இது விடியற்காலையில் தோன்றி பல மணி நேரம் வானத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இது மேகங்களால் மறைக்கப்படும் வரை பெரும்பாலும் அசையாமல் இருந்தது என தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒரு வானிலை பணியக செய்தித் தொடர்பாளர் ஒருவர், ‘அது என்னவென்று எங்களுக்குத் தெரியாது.’ என்று கூறி தனது பெயரை கொடுக்க மறுத்துள்ளார்.