இந்தந்த மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க அனுமதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.!

தமிழகத்தில் 10 மாவட்டங்களிலும், புதுசேரியிலும் நீதிமன்றங்களை வரும் 22ஆம் தேதி முதல் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு அமலில் இருந்ததால், நீதிமன்றங்கள் செயல்படாமல் இருந்துவந்தன. ஆன்லைனில் முக்கிய வழக்குகளின் விசாரணை நடைபெற்று வந்தது. 

இதனை தொடர்ந்து, தற்போது முதற்கட்டமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் நீதிமன்றங்களை வரும் 22ஆம் தேதி முதல் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.  மேலும், புதுசேரியிலும் நீதிமன்றங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஆதலால், கோவை, மதுரை, தஞ்சை, சேலம், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, தி.மலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுசேரியிலும் நீதிமன்றங்கள் வரும் ஜூன் 22ஆம் தேதி முதல் நீதிமன்றங்கள் குறிப்பிட்ட விதிகளோடு செயல்பட உள்ளது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.