தளபதி பிறந்த நாளை முன்னிட்டு ஸ்பெஷல் போஸ்டர்… தரமான சம்பவம்

Default Image

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்றது மட்டுமில்லாமல் பிளாக் பஸ்டர் ஹிட்டுமானது. தற்போது இவர் நடித்து முடித்துள்ள, திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான்.

இந்நிலையில் நடிகர் விஜய் பிறந்தநாள் வருகின்ற 22ம்  தேதி வரவுள்ளதால் விஜய் ரசிகர்கள் அனைவரும், சிறப்பாக கொண்டாட காத்திருக்கிறார்கள், மேலும் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை காமென் டிப்பியை வெளியிட்டு ட்ரெண்ட் செய்தனர், அதை போல் தற்பொழுதும் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சிறப்பான போஸ்டரைலலித்குமார் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்