விராட் கோலியின் தாடி ஓரத்தில் லேசாக நரை உள்ளது.. டேவிட் வார்னர்.!

விராட்கோலி வெளியிட்ட புகைப்படத்திற்கு வார்னர் விராட் கோலியின் தாடி ஓரத்தில் லேசாக நரை உள்ளது என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி, தனது வீட்டிலே பலமணிநேரம் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது இணையதள பக்கங்களில் பதிவிட்டுட்டு ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறார் அந்த வகையில் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு மும்பையின் வானிலையை நான் நேசிக்கிறேன் என்றும், மும்பையில் தொடங்கியுள்ள முதல் பருவமழையே உட்காந்து ரசிக்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த பதிவிற்கு சில பிரபலமான கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள், அதை போல் ஆஸ்திரேலியா அணையின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் “இளம் வீரர் விராட் கோலியின் தாடி ஓரத்தில் லேசாக நரை உள்ளது” என கலாய்த்துள்ளார். மேலும் ஏபி டிவில்லியர்ஸ் ரொம்ப சொகுசானவர் எனக் கூறியுள்ளார். மேலும் வார்னரின் கருத்து தற்பொழுது சமூகவலைத்தளத்தில் ட்ரோல்’ ஆகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024