புலப்பெயர் தொழிலாளர்களுக்கு சலுகை – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

ரூ.50,000 கோடி மதிப்பிலான திட்டங்களில் புலம்பெயர் தொழிலாளர்களை ஈடுபடுத்த திட்டம் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், புலம் பெயர் தொழிலாளர்களுக்காக 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் .புலம் பெயர் தொழிலாளர்கள், பல்வேறு திட்டங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது.Garib Kalyan Rojgar Abhiyaan என்ற திட்டத்தை பிரதமர் ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் .புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களில் பணிபுரிய புதிய திட்டம் வகுக்கப்படும்.6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் அதிகம் புலம் பெயர் தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.உள்ளாட்சித் அமைப்புகளுக்கு   மத்திய அரசு அண்மையில் நிதி அளித்ததுள்ளது என்று தெரிவித்தார்.