ஊதியம் வழங்காவிட்டால் நடவடிக்கை -மத்திய அரசு எச்சரிக்கை.!
நாடுமுழுவதும் கொரோனா தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுக்கும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு நிலுவையில்லாமல் ஊதியம் வழங்க வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.
மேலும், ஊதியம் வழங்கப்படுவதை மாநில சுகாதார செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும், ஊதியம் வழங்கவில்லை என்றால் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை கூறியுள்ளது.