உலகளவில் கொரோனாவால் உயிரிழப்பு விகிதம் 4.5 லட்சத்தை கடந்தது.!
உலக அளவில் 84 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.
இதுவரை உலக அளவில் 8,406,660 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,51,429பேர் உயிரிழந்துள்ளனர். 4,417,386பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து கொரோனாவால் அமெரிக்கா முதல் இடத்தலே இருக்கிறது. மேலும், இந்தியா தற்போது 4 வது இடத்தில் உள்ளது.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், இந்த வைரஸை அழிப்பதற்கு, உலக நாடுகள் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 12,881 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,66,946 அதிகரித்துள்ளது .நேற்று மட்டும் 334 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு 12,237 ஆக அதிகரித்துள்ளது .இதுவரை 52% பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .இன்னும் 1,60,384 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .