திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.09 கோடி.!

Default Image

திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் வருமானம் ரூ.1.09 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி உண்டியல் எண்ணப்பட்டது இதையடுத்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 20ம் தேதி முதல் தற்போது வரை கோயில் நடை மூடப்பட்டுள்ளது பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில் வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்து வருகிறது.

இந்த நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நடந்தது இதில் கோவில் செயல் அலுவலர் தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது, காணிக்கை எண்ணும் பணியில் உதவி ஆணையர்கள் மற்றும் தூத்துக்குடி ரோஜாலிசுமதா, திருச்செந்தூர் செல்வராஜ் ஆய்வாளர்கள் திருச்செந்தூர் முருகன் ஸ்ரீவைகுண்டம் நம்பி அலுவலக கண்காணிப்பாளர், மற்றும் பக்தர்கள் உண்டியல் பணத்தை என்னும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கோவில் நிரந்தர உண்டியல்களில் ரூபாய் 1 கோடியே இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 181-ம் தற்காலிக உண்டியலில் ரூபாய் 6,974-ம் கோவில் அன்னதான உண்டியல் ரூபாய் 6 லட்சத்து 76 ஆயிரத்து 781-ம் மேலக்கோவில் அன்னதான உண்டியல் ரூபாய் 20 ஆயிரத்து 647-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர் , மேலும் மொத்தம் 1கோடியே 9 லட்சத்து 33 ஆயிரத்து 583-யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர் .

இந்நிலையில் மேலும் தங்கம் 829 கிராமும் வெள்ளி 8 கிலோ 96 கிராமம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்துகிறார்கள், வெளிநாட்டு பணம் நோட்டுகளில் 150 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்