இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி அரையிறுதிக்கு முன்னேற்றம்!
இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஆல் இங்கிலாந்து ஓப்பன் பேட்மின்டன் போட்டியில், அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று சுற்றில், , ஜப்பானின் மோசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.
மிகவும் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இருவரும் கடுமையாக போராடினர். இறுதில், 20-22, 21-18, 21-18 என்ற செட் கணக்கில் இந்திய வீராங்கனை சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1 மணி நேரம் 24 நிமிடங்கள் நீடித்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.