மூன்று மாதங்களுக்கு பின் இத்தாலியில் திரையரங்குகள் திறப்பு..!

Default Image

இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கம் ஓரளவு குறைந்த நிலையில், அங்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு அங்கு திரையரங்குகள் திறக்கப்பட்டது.

சீனா, வுஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகையே உலுக்கி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் இத்தாலியில் 237,500 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது அதன் தாக்கம் இத்தாலியில் குறைந்துள்ளது.

இதன்காரணமாக, அங்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இத்தாலி நாட்டில் மூன்று மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டது. மேலும் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக இரண்டு இருக்கைகள் தள்ளி அமர்வது, போன்ற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி, அங்கு கொரோனவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 34,405 ஆக அதிகரித்துள்ள நிலையில், மக்கள் பலரும் திரையரங்கிற்கு வரவுதற்கு அஞ்சுகின்றனர். அதுமட்டுமின்றி, அரசு அனுமதியும் பல திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad - Jarkhand election
Gold Rate
SA vs IND
RAIN
rain
Election 2024
School leave