பொதுத்தேர்வில் மற்ற பாடங்களுக்கு 100 மதிப்பெண்.! இந்த பாடத்திற்கு 75 மதிப்பெண் தான்.!
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் மட்டும் 75 மதிப்பெண்ணுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பல மாநிலங்களில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது. சில மாநிலங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் 10,மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படாமல் இருந்த பொதுத்தேர்வு தமிழக அரசு ரத்து செய்தது. பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால் அனைத்து மாணவர்களுக்கும் காலாண்டு மற்றும் அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பொதுத்தேர்வில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அரசு தேர்வுகள் இயக்கம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில், மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், சமூகஅறிவியல் ஆகிய பாடங்களுக்கு 100 மதிப்பெண்கள் கணக்கிடப்படும் எனவும், அறிவியல் பாடத்தில் மட்டும் 75 மதிப்பெண்ணுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கிடப்படும் என அறிவித்துள்ளது.
மீதமுள்ள 25 மதிப்பெண்கள் அந்தந்த பள்ளியின் மூலம் செய்முறைத்தேர்வு(practical) மூலம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு கடந்த ஆண்டு காலாண்டு மற்றும் அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.