#BREAKING: +2 தேர்வு.! மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத வாய்ப்பு..!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில, கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர். இதனால், படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக பல மாநிலங்களில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது. சில மாநிலங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் +2 மாணவர்கள் தவறவிட்ட வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் தேர்வை மறுதேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மறு தேர்வு எழுதுவதற்கான விருப்ப கடிதத்தை மாணவர்கள் வரும் 24-ம் தேதிக்குள் தலைமையாசிரியர் வழங்கலாம் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளது.