காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டும்- தேர்வுத்துறைஉத்தரவு.!

Default Image

மதிப்பெண்பணிகளுக்காக காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 11-ம் வகுப்புக்கு ஒரு பாடம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ,மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், 10, 11-ம் வகுப்புகளுக்கான மதிப்பெண் தயாரிப்பு பணிகளுக்காக காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்தில் 10, 11-ம் வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவை அனைத்து பள்ளிகளும் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்