பிரதமர் நரேந்திர மோடி 2022ம் ஆண்டுக்குள் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய அரசு இலக்கு!
பிரதமர் நரேந்திர மோடி 2022ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் 105ஆவது இந்திய அறிவியல் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், அறிவியல் ஆய்வை விரிவுபடுத்தும் வகையில் அறிவியலாளர்கள் ஆய்வகங்களில் இருந்து கள ஆய்வுக்கு வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் 2022ஆம் ஆண்டுக்குள் சூரிய ஒளிமூலம் நூறு ஜிகாவாட் மின்னுற்பத்தி செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், இதை எட்டுவதற்கு அறிவியலாளர்கள் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.