சென்னையில் காலையில் வாட்டி வதைத்த வெயில்…மாலையில் மிதமான மழை.!

சென்னை உள்ளிட்ட மண்ணிவாக்கம், மற்றும் தாம்பரம், மணிமங்கலம் ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலை முதல் வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்பொழுது மண்ணிவாக்கம், மற்றும் தாம்பரம், மணிமங்கலம் மற்றும் முடிச்சூர், போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது. காலையில் வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்பொழுது மழை பெய்தது மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்கா விதித்த 245% வரி., சீனாவின் ரியாக்சன் என்ன?
April 17, 2025
ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!
April 17, 2025