தமிழக வீரர் பழனி வீரமரணம் ! ஸ்டாலின் ,தினகரன் இரங்கல்

Default Image

லடாக்கில் நடைபெற்ற மோதலில் தமிழக வீரர் பழனி வீரமரணம் அடைந்த நிலையில் ஸ்டாலின் ,தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.இதில் உயிரிழந்த வீரரில் ஒருவர், தமிழகத்தை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர், ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி என்ற வீரர், அந்த தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக வீரர் வீரமரணம் அடைந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், லடாக்கில் நடந்துவரும் மோதலில் இன்னுயிர் ஈந்த இந்திய இராணுவ வீரர்கள் மூவரின் தியாகத்துக்கு வீரவணக்கம்! 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி,தனது உயிரையும் ஈந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி அவர்களின் குடும்பத்துக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,  சீன ராணுவத்தின் கோழைத்தனமான தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ ஹவில்தார் திரு.பழனி உள்ளிட்ட மூன்று பேருக்கும் கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த வீரர் பழனியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பழனியின் தியாகத்திற்குத் தலை வணங்குவோம் என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்