பட்ஜெட் ஐபோனே இவ்வளவு விலையா.. ஐபோன் எஸ்இ 2 முழு விபரங்கள் இதோ!

Default Image

ஆப்பிள் நிறுவனம், தனது பட்ஜெட் போனான ஐபோன் எஸ்இ 2-ஐ கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டுள்ளது. இது, ஐபோன் ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாகும். இந்த ஆப்பிள் போன்கள் கம்மியான விலையில் வரும் என எதிர்பார்த்த நிலையில், அதன் ஆரம்ப விலை, ரூ.42,500 என ஆப்பிள் நிறுவனம் நிர்ணயித்தது.

iPhone SE (2020) Unboxing! - YouTube

டிஸ்பிலே:

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 ஆனது, 4.7 இன்ச் ரெட்டினா எச்டி எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 750×1334 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது. டிஸ்ப்ளே பேனலில் ஐபோன் 5,6,7,8 மாடல்களில் உள்ள அதே டச் ஐடி உள்ளது. இது, மிக வேகமாக செயல்படுகிறது.

ஓஎஸ் மற்றும் ப்ராசஸர்:

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020-ல், ஏ 13 ரக பயோனிக் சிப் ப்ராசஸரை கொண்டுள்ளது. இது, ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களில் இருக்கும் ப்ராசஸராகும். இதனால் சிறந்த பர்பாமன்ஸை குடுக்கும்.

Test Game PUBG Mobile on iPhone SE Max Settings - YouTube

கேமரா:

இந்த புதிய ஐபோனின் பின்புறத்தில் 12 MP எஃப் 1.8 அபேசர் சிங்கள் கேமரா. இதில் 4K60fps வரை வீடியோகள் எடுக்கலாம். மேலும், பின்புற கேமராவில் ஆடியோவுக்காக ஒரு மிக் வசதியும் உள்ளது. இதன்மூலம் தெளிவான வீடியோ எடுக்கலாம். முன்பக்கத்தில் 7 MP எஃப் / 2.2 அபேசர் கேமரா உள்ளது. மேலும், இந்த கேமராவில் லோ-லைட்ல் புகைப்படம் எடுக்கும் வசதி கிடையாது.

பேட்டரி:

பேட்டரியை பொறுத்தளவில், ஐபோன் 8ஐ விட இதில் பேட்டரி லைப் கம்மி என தெரிவித்தனர். ஆனால் பேட்டரி சைஸ் 1821Mah என தகவல் வெளியானது. அந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 5W பாஸ்ட் சார்ஜர், போனுடன் வருகிறது. மேலும், 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டும் உள்ளது.

iPhone SE 2020 battery life is a major letdown | Tom's Guide

விலை:

ஐபோன் எஸ்இ (2020) 64 ஜிபி வேரியண்ட் – ரூ.42,500
ஐபோன் எஸ்இ (2020) 128 ஜிபி வேரியண்ட் – ரூ.47,800
ஐபோன் எஸ்இ (2020) 256 ஜிபி வேரியண்ட் – ரூ.58,300

இந்த மொபைல், தற்பொழுது பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்கப்பட்டு வருகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்