NO -1 இடத்தை பிடித்த தனுஷ் பாடிய ‘காத்தோடு காத்தானேன்’ பாடல் .!

ஜி. வி. பிரகாஷ் குமார் நடித்து இசையமைக்கும் ஜெயில் படத்தின் ‘காத்தோடு காத்தானேன்’ என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடிய பாடல் டிரெண்டிங்கில் உள்ளது .
கிரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜெயில். இந்த படத்தில் ஜிவி நடித்து இசையமைத்துள்ளார்.மேலும் அபர்னாதி, ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ சங்கர், பிரேம்கி அமரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர் சமீபத்தில் கூட இந்த படத்திலுள்ள ‘காத்தோடு’ என்ற பாடலை தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடியுள்ளதாகவும், அதனை கபிலன் எழுதியுள்ளதாகவும், விரைவில் அந்த பாடல் வெளிவரும் என்றும் ஜிவி கூறியிருந்தார்.
சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் வாங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. நேற்றைய தினம் இந்த படத்திலுள்ள ‘காத்தோடு காத்தானேன்’ என்ற தனுஷ் மற்றும் அதிதி ராவ் ஹைத்ரி பாடிய பாடல் வெளியாகியது. கேட்க இனிமையாகவுள்ள இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பல இதயங்களை கொள்ளை கொண்ட இந்த பாடல் தற்போது யூடுபில் நம்பர் 1 இடத்தை பிடித்து டிரெண்டிங்கில் உள்ளது .
TRENDING right at 1️⃣ with half a MILLION hearts ! ❤️#KaathoduKaathanen from #Jail ➡️ https://t.co/qarmkaI56x@gvprakash @Vasantabalan1 @dhanushkraja @aditiraohydari #Kabilan #Abarnathy #KrikesCineCreation#JailSingleOutNow pic.twitter.com/XdxZL2MQdD
— Sony Music South (@SonyMusicSouth) June 16, 2020