சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதி.!
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில், இதுவரை கொரோனாவால் 42829 பேருக்கு பாதிக்கப்பட்ட நிலையில் 16427 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், 1400 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.