டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா.. சிகிச்சைக்கு 500 ரயில் பெட்டிகள் ஒப்படைப்பு
டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமடைந்து வருவதால், 500 ரயில் பெட்டிகள் ஒப்படைக்கவுள்ளது. அதில் முதற்கட்டமாக, 900 படுக்கை வசதியுடன் 50 பெட்டிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இந்நிலையில், அங்கு ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா சிகிச்சை அளிக்க படுக்கை வசதி இல்லை எனவும், கொரோனா சிகிச்சைகளும் முறையாக இல்லை எனவும் குற்றச்சாற்றுகள் எழுந்தது.
இந்நிலையில், அங்கு கொரோனா சிகிச்சைக்காக 500 ரயில் பெட்டிகளை ஒப்படைக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வடக்கு ரயில்வே தகவல் தொடர்பாளர் தீபக் குமார் கூறுகையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகள் அனைத்தும் வார்டுகளாக மாற்றப்பட்டு வருகிறது.
மேலும், டெல்லிக்கு 500 ரயில் பெட்டிகளை ஒப்படைக்குமாறு மத்திய அரசு அறிவித்தது. அதன்படி டெல்லி, ஷாகுர் பஸ்தி பகுதிக்கு 50 ரயில் பெட்டிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்த பெட்டிகளில் சுமார் 900 படுக்கை வசதிகள் உள்ளன. இதுவரை 180 பெட்டிகளை ஆனந்த் விஹார் உள்ளிட்ட மற்ற ரயில் நிலையங்களில் சில நாட்களில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.