சென்னையில் E-Pass பெறவதற்கு ஆவணங்கள் கட்டாயம்..இதற்கெல்லாம் அனுமதி.!
E-Pass பெறவதற்கு தகுந்த ஆவணங்கள் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பெறவதற்கு உரிய ஆவணங்கள் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு என்று அறிவித்துள்ளது தமிழக அரசு .கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற 19-ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் E-Pass பெறவதற்கு தகுந்த ஆவணங்கள் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையில் இருந்து திருமணம், இறப்பு, மருத்துவம் ஆகிய காரணங்களுக்காக வெளி மாவட்டங்களுக்கு செல்வோர் உரிய ஆவணங்களை செலுத்தினால் மட்டுமே E-Pass பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.