நடிகர் சுஷாந்த் சிங் எழுதிய 50 ஆசைகள்.!

Default Image

இறந்த நடிகரான சுஷாந்த் சிங் தனது 50 ஆசைகள் என்னென்ன என்பதை பேப்பரில் எழுதி வைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில், இவர் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் .

இந்நிலையில், நேற்று இவர் மும்பை BANDRA பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சுசாந்த் சிங்கின் தாய்மாமா, சுசாந்த் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.

அதனையடுத்து போலீசார் அவரது அறையில் சோதனை மேற்கொண்ட போது ,அவரது 50ஆசைகளை எழுத வைத்த குறிப்புகள் கிடைத்தது.அதில் ,குறைந்தது 100குழந்தைகளை நாசாவிற்கு தனது சொந்த செலவில் அனுப்ப வேண்டும் என்றும், தற்காப்பு கலைகளான சிலவற்றை பெண்களுக்கு கற்று கொடுக்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு யோகா, நடனம் போன்றவற்றை சொல்லி கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனக்கு பிடித்த 50 பாடல்களை கிட்டார் வாசித்தப்படி கற்று கொள்ள வேண்டும் என்றும், லம்போர்கினி காரை வாங்க வேண்டும் என்றும், சாம்பியனுடன் டென்னிஸ் விளையாட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் விமானம் இயக்குவது எப்படி என்று கற்று கொள்ள வேண்டும்.100 மரங்களையாவது குறைந்தது நட வேண்டும் ‌கிரிக்கெடட்டை இடது கை வைத்து விளையாட வேண்டும்.விவசாயத்தை குறித்து கற்று கொள்ள வேண்டும்.சாம்பியனுடன் செஸ் விளையாட வேண்டும் என்று பல ஆசைகளை எழுதி வைத்துள்ளார் சுஷாந்த் சிங் . தற்போது அதனை சமூக வலைத்தளவாசிகள் அவரது ஆசைகளை சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக்கி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
TVK Leader Vijay visit Parandur
muthukumaran bigg boss
Palestinian prisoners released by Israel
Sharon Raj Case
TVK Leader Vijay
Jabbar Ali Social Activist