#BREAKING: அரசின் அலட்சிம்.. கொரோனா பரவல் அதிகரிப்பு.! மு.க.ஸ்டாலின்.!
இந்தியாவிலேயே சென்னையில் தான் நோய் பரவல் விகிதம் அதிகம் என மு.க.ஸ்டாலின் என கூறினார்.
தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.அப்போது, பேசிய அவர் அரசின் அலட்சியத்தால் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவின் மொத்த நோய் தொற்றில் 10% சென்னையில் தான் உள்ளது.
கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட 2- வது மாநிலமாக தமிழகம் உள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் 10 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று என்ற நிலை உள்ளது. இந்தியாவிலேயே சென்னையில் தான் நோய் பரவல் விகிதம் அதிகம் என மு.க.ஸ்டாலின் என கூறினார்.
மேலும், கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், டாஸ்மாக் கடைகளை திறந்தது வேதனையளிக்கிறது. கொரோனா தொற்று சென்னையில் மட்டும் 5.2% அதிகரித்து உள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா இறப்பு விவரங்களை அரசு வெளிப்படையாக கூற வேண்டும். கொரோனாவால் 2 மாதங்களாக தமிழகம் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறது என கூறினார்.
தமிழகத்தில், அரசின் அலட்சியத்தால் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது என தெரிவித்தார்.