100 வயதான முதும்பெறும் கிரிக்கெட் வீரர் காலமானார்
இந்தியாவின் பழமையான முதல் தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி சனிக்கிழமை அதிகாலையில் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் .
வசந்த் ராய்ஜி இவர் இந்தியாவின் முதும்பெறும் கிரிக்கெட் வீரர். இவர் மும்பையில் அவர் மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்தார் .நேற்று அதிகாலை 2.30 மணிக்கு வயது முதிர்வு காரணமாக காலமானார் என்று அவரது மருமகன் சுதர்ஷன் நானாவதி பி.டி.ஐ யிடம் தெரிவித்தார்.
வலது கை பேட்ஸ்மனான வசந்த் ராய்ஜி , 1940 களில் மும்பை மற்றும் பரோடா அணிக்காக ஒன்பது முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார் , 277 ரன்களை எடுத்துள்ளார் ,அவர் கிரிக்கெட் வாழ்க்கையில் 68 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராகும்.
பிரபல நட்சத்திர வீரர்களான சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வா ஆகியோர் ஜனவரி மாதம் ரெய்ஜிக்கு 100 வயதை எட்டியபோது அவர் வீட்டிற்கு சென்று பிறந்தநாளை கொண்டாடடினர். ரைஜியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் வீடியோவை சச்சின் தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
Wishing you a very special 1⃣0⃣0⃣th birthday, Shri Vasant Raiji.
Steve & I had a wonderful time listening to some amazing cricket ???? stories about the past.
Thank you for passing on a treasure trove of memories about our beloved sport. pic.twitter.com/4zdoAcf8S3— Sachin Tendulkar (@sachin_rt) January 26, 2020