தொடர்ந்து 10-வது நாளாக எதிர்க்கட்சிகளின் போராட்டங்களால் மக்களவை முடக்கம்!
தொடர்ந்து 10-வது நாளாக மக்களவை எதிர்க்கட்சிகளின் போராட்டங்களால் முடங்கியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி உள்ளிட்ட விவகாரங்களில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மக்களவையில் இன்று அ.தி.மு.க., தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக இன்று உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர், புல்பூர் மற்றும் பீகாரின் அரேரியா மக்களவை இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற சமாஜ்வாதி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.