மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை !

மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 1,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை 42,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதுவரை 23,409 பேர் குணமடைந்துள்ளனர்.18,878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 397 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். வருகின்ற 16 மற்றும் 17ஆம் தேதிகளில் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!
April 28, 2025