ஆன்லைனில் மதுபான விற்பனை ? அமைச்சர் தங்கமணி விளக்கம்
ஆன்லைனில் மதுபானம் விற்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன் பின்னர் அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்தது.ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் மூட உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதனை விசாரித்த நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்தது.இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில், ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இந்நிலையில் ஆன்லைனில் மதுபானம் விற்பது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.