இது உங்க வாகனமா? அப்ப உடனே எடுத்து செல்லுங்கள்.. மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

Default Image

திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய வாகன காப்பகத்தில் நிறுத்தப்பட்டுள்ள நான்கு சக்கர வாகனங்களை உடனே எடுத்துசெல்லுமாறு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட “பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில்” (நெல்லை புதிய பேருந்து நிலையத்தில்) செயல்பட்டு வரும் வாகன காப்பகத்தில் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் சீர்மிகு நகரத்திட்டத்தின் (SMART CITY SCHEME) கீழ் பல அடுக்கு வாகன காப்பகம் (Multi Level Car Parking) கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வாகன காப்பகத்தில் விட்டுச் சென்றுள்ள TN 75 – 1437 – லோடு வேன் , PY 01 F 9405 – கார் , TN 72 Q 4974 – லோடு வேன் , TN 72 BK 1566 – லோடு வேன் , TN 72 AM 5020 – கார் , TN 72C 4208- ஆட்டோ , TN 73 D 4735 – கார் , TN 74F 4891 – லோடு வேன் , KL 07 AE 2356 – கார் , TN 72 AH 2356 – கார் , TN 12E 7706 – கார் , TN 72 AC 4725- ஆட்டோ , TN 72 H 8109 – Cogit H. GLIT , TN 67 L 7779 – TT , TN 72BM 8915 – TT , TN 64 U 7099 – கார் , TN 84 F 8022 – டிராக்டர் , TN 76 F 3142 – கார் மற்றும் சூரியா வேன் ஆகிய வாகனங்களுக்குரிய உரிமைதாரர்கள் உரிய ஆவணங்களை பேருந்து நிலைய வாகன காப்பகத்தில் சமர்ப்பித்து உடனடியாக தங்களுக்கு உரிய வாகனங்களை எடுத்து செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது .

மேற்க்கண்ட வாகனங்களைத் எடுத்து செல்ல தவறும்பட்சத்தில், அந்த வாகனங்கள் அனைத்தையும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும் என திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜி.கண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்