சூனவல்லாவின் மேலாடை இல்லாத படத்தை நீக்கிய இன்ஸ்டாகிராம்.!
பெனாஃப்ஷா சூனவல்லாவின் மேலாடை இல்லாத படத்தை நீக்கிய இன்ஸ்டாகிராம்.
பிக் பாஸ் 11 போட்டியாளர் பெனாஃப்ஷா சூனவல்லா இந்த வார தொடக்கத்தில் மேலாடை இல்லாமல் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் இந்த புகைப்படத்தை நீக்கியதாக பெனாஃப்ஷா சூனவல்லா தெரிவித்தார்.
மேலும், அவர்களால் இதுபோன்ற கவர்ச்சி புகைப்படத்தை நீக்க முடியாது எனவும், தன்னைப் பின்தொடர்பவர்களில் சிலரால் இது புகாரளிக்கப்பட்டது என்று நான் நம்புகிறேன். ஆனால் பரவாயில்லை, உங்கள் சருமத்தின் நிறத்தினாலும், நீங்கள் எவ்வளவு தோலைக் காட்டினாலும், உங்களை யாரும் தீர்மானிக்காத ஒரு உலகத்திற்காக நான் காத்திருக்கிறேன் என பெனாஃப்ஷா சூனவல்லா தெரிவித்தார்.