ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்ய தாமதம் ஏற்பட்டால் அபராதம் கிடையாது -நிர்மலா சீதாராமன்.!
ஜிஎஸ்டி வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் அபராதம் கிடையாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று காணொலி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர், அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், என அனைவரும் பங்கேற்றனர்.
கொரோனா வைரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, மாநிலங்களுக்கு ஏற்பட்ட வரி வருவாய் இழப்பு ஆகியவை குறித்து இந்த ஜிஎஸ்டி கவுன்சில் குழுக்கூட்டத்தில் பேசப்பட்டது.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் அபராதம் கிடையாது. வரியை முழுமையாக செலுத்தி இருந்தால் கணக்கு தாக்கலில் தாமதமானாலும் அபராதம் இருக்காது என்றும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாகவே 2017-ம் ஆண்டு ஜூலை முதல் 2020 ஜனவரி வரை காலத்திற்கான ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன.
இந்த ,காலத்திற்கான ஜிஎஸ்டி தாக்கலை தாமதக் கட்டணம் இன்றி செலுத்தலாம். அதற்கு முந்தைய காலத்திற்குரிய ஜிஎஸ்டி தாமதக் கட்டணம் 18 % இருந்து 9% சதவீதமாக குறைக்கப்படுகிறது என கூறினார்