இந்திய அணியின் சுற்றுப்பயணங்கள் ரத்து ! பிசிசிஐ அறிவிப்பு
இலங்கை மற்றும் ஜிம்பாவே அணியுடனான தொடர் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் உலக நாடுகள் திணறி வருகின்றது.கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக தான் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கவும் தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.பொருளாதார ரீதியாக உலக நாடுகள் சரிவை கண்டு உள்ளது.அதுமட்டும் அல்லாமல் விளையாட்டு உலகமும் முடங்கி உள்ளது. விளையாட்டு போட்டிகள் மூலமாக கிடைக்கும் வருவாயும் தடைபட்டுள்ளது.
குறிப்பாக கோடைகாலத்தில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் தடைப்பட்டுள்ளது.அந்த வகையில் தான் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது ஜூன் 24 ஆம் தேதி இலங்கை அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி -20 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதேபோல் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜிம்பாவே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.கொரோனா பரவல் காரணமாக தற்போது ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
NEWS : The BCCI on Friday announced that the Indian Cricket Team will not travel to Sri Lanka and Zimbabwe owing to the current threat of COVID-19.
More details here – https://t.co/W0zQXwh98x pic.twitter.com/vDLtmCpYfg
— BCCI (@BCCI) June 12, 2020