அமெரிக்காவில் கொலம்பஸ் சிலையின் தலையை துண்டித்து…ஏரியில் வீசும் போராட்டக்காரர்கள்.! காரணம் என்ன ?
மியாமி நகரத்தில் கொலம்பஸ் சிலை தகர்க்கப்பட்டது. ஏற்கனவே இதேபோல் வர்ஜீனியாவின் ரிச்மண்டில் உள்ள கொலம்பஸ் சிலை மக்கள் தகர்த்து ஏரிக்குள் கொண்டு வீசியுள்ளார்கள் கிளே வீடியோ உள்ளது பாருங்கள்.
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள, மின்னியாபோலீஸ் நகரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டிருந்த நிலையில், போலீஸ் அதிகாரி ஒருவரால், ஜார்ஜ் ஈவு இரக்கமற்ற முறையில், முழங்காலால் கழுத்து நெரித்து கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், போலீஸ் அதிகாரியின் இந்த வெறி செயலை கண்டித்து, கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில், போலீஸ்காரர்களும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், பல இடங்களில் வன்முறைகளும், கலவரங்களும் நடந்து வருகிறது. அந்தவகையில் காலணிய ஆதிக்கத்தின் அடிமைத்தனத்தினை நினைவுகூரும் சிற்பங்களையும், சின்னங்களையும் தொடர்ச்சியாக தகர்த்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பாஸ்டன் நகரத்தில் திரண்ட போராட்டக்காரர்கள், இனவாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு அங்கிருந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் சிலையின் தலையை தனியாக துண்டித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வர்ஜீனியாவின் ரிச்மண்டிலும், மற்றொரு போஸ்டனிலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது.அங்கு மக்கள் ரோட்டில் உருட்டி கொண்டு வந்து ஏரியில் வீசியுள்ளனர்.புதன்கிழமை பிற்பகல் 10 அடி வெண்கல சிலையைச் சுற்றி ஒரு கயிறு வீசப்பட்டது, அவர்கள் அதை அதன் கல்லில் இருந்து இழுத்தனர். மேலும் அதே ரோட்டில் இழுத்து போட்டு உற்சாகமாக கத்தி கூச்சலிட்டனர்.
ஹெல்மெட் அணிந்தகொண்டு மாநில ரோந்து படையினர் கேபிடல் வளாகத்தில் பாதுகாப்பை வழங்கும் பொருட்டு தூரத்தில் நின்றனர். ஆனால் போராட்டக்காரர்களை தடுக்க முயற்சிக்கவில்லை.
BREAKING: Protesters have toppled the Christopher Columbus statue at the Minnesota State Capitol. @WCCO pic.twitter.com/uCpZY1zoA8
— Nick Streiff (@nickstreiff) June 10, 2020
The moment a statue of slave trader Edward Colston toppled into Bristol’s harbour. ‘It’s what he deserves. I’ve been waiting all my life for this moment’ someone told me in the moments after. pic.twitter.com/6juqVrsJ6V
— Sarah Turnnidge (@sarah_turnnidge) June 7, 2020