#BREAKING: ராயபுரத்தில் 4,584 பேருக்கு கொரோனா பாதிப்பு.!
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,584 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 38,716 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று 1,407பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள கொரோனா பாதிப்பு விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதில், அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4584 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தேனாம்பேட்டை மண்டலத்தில் இதுவரை 3,291 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டை மண்டலத்தில் 3,584 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.