டெல்லியில் இதுவரை இல்லாத உச்சத்தை தொட்ட எண்ணிக்கை
டெல்லியில் ஒரே நாளில் 1,877 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 34,687ஆக உயர்வு.
டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் ,877 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 34,687ஆக உயர்ந்துள்ளது.
அதில் 65 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1085 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 486 பேர் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 12,731 ஆக உயர்ந்துள்ளது எனவும், 20,871 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.