60 மில்லியன் பார்வையாளர்களை அடித்து நொறுக்கிய ‘குட்டி ஸ்டோரி’ பாடல்.!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படத்திலுள்ள குட்டி ஸ்டோரி பாடல் யூடுபில் சாதனை படைத்துள்ளது.
தளபதி விஜய் தற்போது நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான். சமீபத்தில் தான் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கப்பட்டது. விரைவில் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, இணையதளங்களிலும் பல்வேறு சாதனைகளையும் பெற்று வருகிறது. அதிலும் விஜய் பாடிய ஒரு குட்டி ஸ்டோரி பாடலும், வாத்தி கமிங் பாடலுக்கு பல பிரபலங்கள் மாஸ்ஸான நடனமாடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உலகளவில் அந்த பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்து டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில் தற்போது விஜய் அவர்கள் பாடிய ஒரு ‘குட்டி ஸ்டோரி’ பாடல் யூடுபில் 60 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
AN ABSOLUTELY PHENOMENAL #60MillionViewsForKuttiStory, NANBA! ????????
Konjam chill pannu , Maapi with #Thalapathy‘s #KuttiStory now????➡️https://t.co/GEbmVK0O1X@anirudhofficial @Dir_Lokesh @Jagadishbliss @Lalit_SevenScr @XBFilmCreators @Arunrajakamaraj @filmmaker_logi #Master pic.twitter.com/9Q52a1IEtr
— Sony Music South (@SonyMusicSouth) June 11, 2020