பச்சை நிறத்திலிருந்து பிங்க் நிறமாக மாறிய ஏரி
மஹாராஷ்டிராவில் பச்சை நிறத்திலிருந்து பிங்க் நிறமாக மாறிய ஏரி..
மஹாராஷ்டிரா மாநிலத்தின், புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் என்ற ஏரி, திடீரென ஒரே நாளில் பச்சை நிறத்திலிருந்து, பிங்க் நிறத்திற்கு மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உப்பு ஏரியான இந்த ஏரியில் உள்ள பாசிகள் மற்றும் ஆல்கஹாக்களே இந்த நிற மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதற்க்கு முன்னால் இந்த ஏரி பல முறை நிறமாற்றம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.