#Breaking: தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 23 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில், கொரோனவால் இன்று ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்ததால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 349 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், ஒரே நாளில் 1,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 38,716 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 349 ஆக அதிகரித்தது. இதில் அதிகபட்சமாக, சென்னையில் மட்டும் ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.