கார்த்தி சிதம்பரத்தின் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
கார்த்திக் சிதம்பரத்தை ஜாமீனில் வெளியிட்டால் தடயங்களை அழிக்க முயற்சி செய்வார் என சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கார்த்தி சிதம்பரம் ஆவணங்கள்,ஆதாரங்கள், சாட்சிகளை அழிக்க முற்பட்டார் என்று சி.பி.ஐ. நிரூபித்தால், ஜாமின் மனுவை திரும்ப்பெற தயார் என கார்த்தி சிதம்பரம் தரப்பு வாதிட்டது.
கார்த்தி சிதம்பரம் தன் மீதான குற்றச்சாட்டுக்கான முக்கிய ஆதாரங்களை அழித்துள்ளார். மேலும் விசாரணையின் போதும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை; எனவே ஜாமினில் விடுவிக்கக்கூடாது என்பதுவே சி.பி.ஐ. தரப்பு வாதம் ஆகும்.
கார்த்திக் சிதம்பரத்தை ஜாமினில் வெளியே விட்டால் வழக்கு விசாரணைக்கு தொய்வு ஏற்படுத்தும் என சி.பி.ஐ. வாதம் செய்தது.
இதனைதொடர்ந்து கார்த்திக் சிதம்பரத்தின் மீதான ஜாமீன் மனு மீதான விசாரணை மற்றும் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு. இறுதியாக தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.