ஆன்லைன் வழக்கு விசாரணையில் ஆபாசமாக பேசிய வழக்கறிஞர்..நடந்தது என்ன?
தூத்துக்குடியில் ஆன்லைன் வழக்கு விசாரணையில் ஆபாசமாக பேசிய வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
கொரோனா காரணமாக நீதிமன்றத்தில் செயல்படும் வழக்கறிஞகள் அனைவரும் வீட்டில் இருந்தே ஆன்லைனில் வழக்கு வாதம் செய்து வருகிறார்கள் அந்த வகையில் தூத்துக்குடி ஆன்லைன் வழக்கு விசாரணையில் ஆபாசமாக பேசிய வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. சாலை ஓரத்தில் நின்றுகொண்டு வழக்கறிஞர் ஒருவர் ஜாமீன் வழக்கில் வாதம் செய்து கொண்டிருக்கும்போது சாலையில் கார் ஒன்று காரன் அடித்து கொண்டு சத்தத்துடன் சென்றதால் அதே கண்டு கோவத்தில் வழக்கறிஞர் ஓட்டுநரை திட்டியுள்ளார்.
வழக்கறிஞர் ஆபாசமாக திட்டியதே ஆன்லைனில் கேட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதி வழக்கறிஞர்கள் அதிர்ச்சியில் அந்த வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நீதிபதி ரூ.100 அபராதம் விதித்தார். மேலும் வழக்கறிஞர் குறித்து தமிழ்நாடு பார்கவுன்சிலில் நீதிபதி புகார் தெரிவித்துள்ளார்.