உலகிலே முதல்முறையாக “வழுக்கை தலை” கிரிக்கெட் அணி ! இதுல இந்திய வீரரை காணோம்?
இந்த ஊரடங்கு நேரத்துல பல வழிகளில் நேரத்தை போக்கி வரும் நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன், திடீரென உலகிலேயே சிறந்த வழுக்கைத் தலை டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன், வித்தியாசமாக வழுக்கை தலை கிரிக்கெட் வீரர்களை கலாய்த்து வந்தார். அதாவது, வழுக்கை தலை கிரிக்கெட் அணியை உருவாக்கினார். இதுகுறித்து அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு பதிவை பதிவிட்டார். அப்பொழுது தான் தெரிந்தது, கிரிக்கெட் ல இவ்ளோ வலுக்க தல வீரர்கள் இருக்காங்கனு.
View this post on InstagramMy Test cricket greatest ‘Bald Xl’ .. #Tuffers&Vaughan !!! 8pm on @5livesport ????
அணி வீரர்கள்:
இந்த வழுக்கை அணியின் துவக்க வீரராக, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரஹாம் கூச் மற்றும் முன்னாள் தென்னாப்பிரிக்க அணியின் வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் ஆவர். இவர்கள் இருவருமே தங்கள் அணியின் நட்சத்திர வீரர்கள்.
நா இல்லாம வழுக்கை அணியா?
மூன்றாம் இடத்தில் மற்றொரு தென்னாப்பிரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா. வழுக்கைத் தலையுடன், நீண்ட தாடி வெச்ச இவரை தெரியாத ரசிகர்களே இல்லை. இவர் 2019ல் சர்வதேச கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளரான டேரன் லெஹ்மன் இடம் பெற்றார். ஐந்தாம் இடத்தில் மற்றொரு முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜோனாதன் ட்ராட்ஐ தேர்வு செய்தார்.
கேப்டன் மற்றும் கீப்பர்:
இந்த அணிக்கான கேப்டனாக பிரையன் குளோஸ், தேர்வு செய்யப்பட்டு, ஆறாம் இடத்தில் களமிறங்கவுள்ளார். இவர் 1949ல் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் ஆடிய மிக இளம் வீரர் ஆவார். இவர், 2015 ஆம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த, ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பராக மாட் ப்ரியாரை தேர்வு செய்துள்ளார்.
அவர்களை தொடர்ந்து அடுத்த அடுத்த இடங்களில் பந்துவீச்சில், ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் டோக் போலிங்கர், சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியோனை தேர்வு செய்துள்ளார். மேலும், அடுத்த வேகப் பந்துவீச்சாளராக பாகிஸ்தான் அணியை சேர்ந்த ராணா நவேத் அல் ஹுசன். இறுதியாக, ஜாக் லீச் அல்லது கிறிஸ் மார்ட்டின் என இருவரையும் அறிவித்துள்ளார்.
இந்திய வீரர எங்கயா?
மேலும் அந்த அணியில் இந்திய வீரர்கள் யாரும் நிலையில், ஒருவர் “இந்தியா அணியின் தலைசிறந்த ஒப்பனரான சேவாக்கும் வழுக்கை தான். அவரை எங்க?” என்று கமன்ட் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, பலரும் இந்திய அணியை சேர்ந்த வீரர்களை அந்த பட்டியலில் காணவில்லை என கமன்ட் செய்து வருகின்றனர்.
இந்த பட்டியலில் பெரும்பாலான வீரர்கள் இங்கிலாந்து அணியை சார்ந்தவர்கள் என்பதால், இங்கிலாந்து அணியில் நிறைய வீரர்களுக்கு வழுக்கை தலை என்பதை சுட்டி காட்டுவதற்காக இந்த அணியை உருவாக்கினாரா? என்ற கேள்வியை நகைச்சுவையாக ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்.