#Breaking: தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா.. ஒரே நாளில் 19 பேர் உயிரிழப்பு!

Default Image

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் கொரோனவால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், ஒரே நாளில் 1927 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தமிழகத்தில் 36,841 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில் 1,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 326 ஆக அதிகரித்தது. அதில், 60 வயதுக்கு கீழ் 6 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வாரத்தில் 118 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளது, மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack
america terrorist attack in kashmir
X account suspended
Kashmir to Chennai return