தென்மேற்கு பருவக்காற்று.. தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு!
தென்மேற்கு பருவக்காற்று வீசி வரும் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் மத்திய வங்கக் கடல், ஆந்திரா, ஒடிசா ஒட்டிய கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது, மேலும் சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மேலும் கிருஷ்னகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மேலும் தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.