12-ம் வகுப்பு மதிப்பெண்கள் 10 நாட்களில் பதிவேற்றப்படும்.!

Default Image

12-ம் வகுப்பு மதிப்பெண்கள் 10 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி மார்ச் 24-ம் தேதி வரை நடைபெற்றது. ஊரடங்கு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த மாதம் 27 -ம் தேதி முதல் நேற்றுவரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.

இதையடுத்து, 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் 10 நாட்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக விடைத்தாள் திருத்தும் பணி மையங்களின் எண்ணிக்கை 67-ல் இருந்து 202 ஆக அதிகரிக்கப்பட்டு  44 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்