என்ன கொடும சார் இது.. சூதாட்ட பந்தயத்தில் பங்கேற்றதற்காக கழுதை கைது!
பஞ்சாப் (பாகிஸ்தான்), ரஹீம் யார் கான் என்ற மாவட்டத்தில் நடந்த சூதாட்ட பந்தயத்தில் பங்கேற்றதற்காக 8 நபர்கள் உட்பட கழுதை ஒன்று கைது செய்யப்பட்டது.
பஞ்சாப் மாகாணத்தில் (பாகிஸ்தான்) உள்ள ரஹீம் யார்கான் நகரில் கழுதை ஓன்று சூதாட்ட பந்தயத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டது. அங்கு சூதாட்ட பந்தயம் நடப்பதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தை அடுத்து, அங்கு விரைந்து சோதனை நடத்தினர். அப்போது, 8 நபர்கள் உட்பட கழுதை ஒன்றை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த ரூ. 1,20,000 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Donkey arrested for participating in a gambling racing in Rahim Yar Khan. Eight humans also rounded up, Rs 120,000 recovered. https://t.co/RIULiecduw pic.twitter.com/1FipntTR60
— Naila Inayat नायला इनायत (@nailainayat) June 7, 2020
மேலும், கழுத்தை கைது செய்த செய்தி, நெட்டிசன்கள் பார்வையில் பட, அவர்கள் வழக்கம் போல் தங்களின் வேலைகளை செய்ய தொடங்கினர். அவர்கள் அந்த பதிவை கலாய்கயில், நமக்கு சிரிப்பு அடக்கமுடியவில்லை.