பாகிஸ்தானில் கொரோனாவால் ஒரே நாளில் 105 பேர் உயிரிழப்பு.!
பாகிஸ்தானில் ஒரே நாளில் 100 க்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளார்கள் 4,646 புதிய கொரோனா தோற்று உறுதி என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் ஒரே நாளில் 100 க்கும் மேற்பட்ட உயிரிழந்துள்ளார்கள் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் கடந்த 24 மணி நேரத்தில் 24,620 சோதனைகளை மேற்கொண்டனர் அதில் 4,646 புதிய கொரோனா தோற்று உறுதி என கண்டறியப்பட்டடுள்ளது. மொத்தமாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 108,317 ஆக உயர்ந்துள்ளது . நேற்று மட்டும் மொத்தம் 105 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் இதுவரை உயிரிழந்த எண்ணிக்கை 2,172 ஆக உள்ளது. இதுவரை 35,018 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று கூறியுள்ளனர் மேலும் கொரோனா பாதிப்பில் பாகிஸ்தான் 16வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பாகிஸ்தானில் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் பாதிப்பு உச்சத்தை தொடும் என்பதால் வரும் நாட்களில் குறைவாக பரவுகின்றன என்று தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், உயிரிழப்பு 4 லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரையில், உலகம் முழுவதும் 7,199,306 பேர் கொரோனாவால் பாதிக்கட்டுள்ள நிலையில், 408,734 பேர் உயிரிழந்துள்ளனர்.